ஸ்ரீலங்காவில் ஆறு அடி நீளமான முதலை ஒன்று பொலிஸாரினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுளது. குறித்த இடத்திலுள்ள மாது ஏரியிலிருந்து 6 அடி நீளமுடைய முதலை ஒன்று மக்கள் குடியிருப்பிற்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் இதனைக் கண்டு அச்சப்பட்ட மக்கள் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த முதலையைப் பிடித்துச் சென்று பொலிஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.
அதன்பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அம்பலங்கொட பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரி தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் சிறைச்சாலையில் இருந்த முதலையை விடுவித்து பாதுகாப்பான இடத்திற்கு முதலையை கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலை காணப்பட்டுள்ளது.