வெளிநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை பணத்தின் ஒரு பகுதி இலங்கைக்கு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தாய்வானின் பிரபல வர்த்தக வங்கி ஒன்றின் கணனி செயற்பாட்டுக்குள் ஊடுருவிய ஹெக்கர்களால் 600 மில்லியன் டொலர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணம், பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தாய்வான் சைபர் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெக்கர்களினால் திருடப்பட்ட 600 மில்லியன் டொலரில் ஒருதொகுதி பணம், இலங்கை வரத்தக வங்கிகள் பலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்ட பணத்தில் அதிகமான பணம் இலங்கை வங்கி கணக்கிலேயே வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த கணக்கு மற்றும் குறித்த நபர்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் தற்போது விரைவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வங்கிக் கணக்குகள், ஹெக்கர்களினால் ஊடுருவப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதன்போது சர்வதேச ஹெக்கர்களுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பொன்று இலங்கையில் செயற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.