தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மருமகள் ஐஸ்வர்யா.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மருமகள் ஐஸ்வர்யா. இவர் தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘கருப்பன்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவர் நீல்க்ரிஸ் டிரீம் எண்டர்டைன் மெண்ட் தயாரிக்கும் ‘கூத்தன்’ படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

இதுகுறித்து அந்த குழுவிடம் கேட்டபோது…. “ படத்தில் மொத்தம் 4 பாடல்கள். இதில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு குத்து பாடல் பாடியுள்ளார். இப்போது ஐஸ்வர்யா கர்னாடிக் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் பாடி அசத்தியிருக்கிறார். முதலில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று தான் நாங்கள் அழைத்தோம். ஆனால் அவர் பாடல் பாடிய விதம் குரலின் இனிமை. அமோகமாக பாடும் தன்மை இந்த திரைப்படத்தின் தயாரிப்பார் நில்க்ரிஸ் முருகனுக்கும் இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது. மற்றொரு பாடலையும் சேர்த்து இவரே பாடட்டும் என்று முடிவு செய்தனர்.

‘கூத்தன்’ படத்தை எல். வெங்கி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர் ராஜ்குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘நில்க்ரிஸ் முருகன் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா, யுவன்‌ஷங்கர் ராஜா இசையில் ‘ஆக்ஸிஜன்’ என்ற தெலுங்கு படத்திலும் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்.