சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சைக்கியில் வீதியைக் கடக்க முற்பட்ட நபரை வேகமாக வந்த மினிபஸ் மோதித்தள்ளியதாகத் தெரியவருகின்றது.
சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் ராஜ்குமார் (வயது-38) என்னும் நகைத் தொழில்
செய்யும் ஒருவரே படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.