கனேடிய குடியுரிமைக்கான புதிய மொழி மற்றும் வதிவிட சட்டங்கள்!

கனேடிய குடியுரிமைக்கான புதிய மொழி மற்றும் வதிவிட சட்டங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

[UNSET]

குறுகியகால வதிவிட தேவை மற்றும் மொழி அறிவுசோதனைக்கான புதிய நடைமுறைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனால் கடந்த புதன்கிழமை மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் பிரகாரம், 55 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து விலக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றமானது எதிர்கால விண்ணப்பதாரர்களால் வரவேற்கக் கூடிய முடிவாக அமையும் என்பதுடன், குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கனேடிய முன்னாள் பிரதமர், ஹாப்பர் அரசாங்கம் குடியுரிமையை பெறுவதற்கு கனடாவின் நான்கு வருடங்கள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும் என்று வதிவிட தகைமை கால எல்லையை அதிகரித்தது. அதனை அடுத்து குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்தது.

அதுமட்டுமின்றி 14 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட விண்ணபதாரிகள் கட்டாய மொழி மற்றும் குடியுரிமை அறிவு பரீட்சைகளின் சித்தியடைய வேண்டும் என்றும் விதிமுறை அளித்தது.