வடக்கில் அரச ஊழியர்களின் அசமந்த போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டு காட்டிய இளைஞர்! – வீடியோ

ஒரு நாட்டில் அரசியல் வாதிகளை பார்க்கிலும், அரச ஊழியர்கள் மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

Capturesytr

ஏனெனில் அரசியல் வாதிகளின் இருப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. ஆனால் அரச ஊழியர்கள் அப்படியல்ல. ஓய்வூதியம் பெறும் வரையிலும் அவர்கள் அரச சேவையாளர்களே.

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் அரசியல்வாதியை பார்க்கிலும், அரச ஊழியர்களின் பங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. அரச ஊழியர் என்பவர் மக்கள் சேவகனே. மக்களுக்காகவே அவர்களின் சேவை இருக்க வேண்டும்.

அரச ஊழியர்கள் அசமந்த போக்குடன் செயற்பாடுவார்களானால் நாட்டின் அனைத்து விடயங்களும் அசமந்த போக்குடனேயே இருக்கும். இதனை பல தமிழ் சினிமா படங்களும் எடுத்து காட்டியிருக்கின்றன.

அந்த வகையில், வடக்கில் அரச ஊழியர்களின் அசமந்த போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் தமிழ் இளைஞர் ஒருவர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

குறித்த இளைஞர் தனது தேவைகளுக்காக அரச அலுவலகம் ஒன்றுக்கு சென்ற நிலையில், அவருக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் நீண்ட கால தாமதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர், அங்கிருந்த அரச ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியதுடன், அவர்களின் செயற்பாட்டை முகப்புத்தகத்தில் நேரலையாக காணொளியாக வெளியிட்டுள்ளார்.

அந்த இளைஞரின் கேள்விகளுக்கு பதில் வழங்க முடியாதிருந்த அரச ஊழியர்கள், இளைஞரின் செயற்பாட்டினால் கலங்கி போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது