கழிவுப்பொருட்களை பயன்படுத்தி விவசாய உபகரணங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை முல்லைத்தீவு விவசாயி ஒருவர் கண்டுபிடித்து செயற்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதி ராதாகிருஷ்ணன் எனும் விவசாயியே கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.
விவசாய செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இவர் பல்வேறு உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.
விவசாயத்திற்கு தேவையான பயிர்களுக்கு மண் அணைக்கும் சாதனம், வரம்பு கட்டும் சாதனம், நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவற்றை தனது முயற்சியினால் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.