7வயது சிறுவனிடம் வாங்கிய பரிசு, 14வருடம் கழிந்து நடந்த அதிசயம்!

சிறு வயதில் கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை அமெரிக்க சிறுவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிறுமி 14 வருடங்கள் கழித்து அதே சிறுவனையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

அமெரிக்காவை சேர்ந்த Tyrel Wolfe என்ற 7 வயது சிறுவன், சர்வதேச மனிதாபிமான அமைப்பான Samaritan’s Purse உதவியுடன் காலணிகள், பொம்மைகள் மற்றும் சில பரிசுப்பொருட்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையினையும் அனுப்பியுள்ளான்.

அதனுடன் தனது புகைப்படம் ஒன்றையும் அனுப்பியுள்ளான், இந்த பரிசுப்பொருளானது உலகில் உள்ள பல்வேறு மக்களை சென்றடையும் வண்ணம் இந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, Tyrel அனுப்பிய பரிசுப்பொருள்களானது அமெரிக்காவிலிருந்து சுமார் 13, 232 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Joana Marchan என்ற சிறுமியிடம் சேர்ந்துள்ளது.

அந்த பரிசுப்பொருட்களை பெற்றுக்கொண்ட Joana, Tyrelக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அந்த அட்டையானது Tyrel – ஐ சென்றடையவில்லை.

இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து Joana பேஸ்புக் வாயிலாக Tyrel – க்கு Friend Request அனுப்பியிருந்தார். அதனை Accept செய்த Tyrel தொடர்ந்து Joana- வுடன் சாட் செய்துள்ளார்.

நாளடைவில் இவர்கள் இருவரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற Tyrel அங்கு Joana- வை சந்தித்துள்ளார்.

அப்போது அவளது வீட்டில் இருந்த புகைப்படங்களை பார்த்தபோது அதில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பார்த்த Tyrel ஆச்சரியமடைந்துள்ளார்.

அதன்பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொண்டனர், அதன்பின்னர் சுற்றுலா முடித்து அமெரிக்கா திரும்பிய Tyrel – தனது காதலை Joana – விடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு Joana சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

கிறிஸ்துமஸ் வாழ்த்தால் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவோம் என கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.