கனடாவில் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருணை கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில்
பெரும்பாலும் புற்றுநோயால் அவதிபட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகக் கனேடிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இதுவரை ஆயிரத்து 982 மருத்துவ ரீதியான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.