சிலாபம் பாடசாலையொன்றில் 10 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவ மாணவி ஜோடிகள் பாடசாலை செல்வதாக கூறி வீடொன்றில் தனிமையில் இருந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 ஆம் தர 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் பாடசாலைக்கு செல்வதாக கூறி கடந்த புதனன்று (04) தனியாக வீடொன்றில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவிகள் இருவரும் சிலாபம் நகரத்தின் வெளியே வசிப்பவர்களாவர். எனவே சம்பவ நாளன்று பாடசாலைக்கு வராத மாணவர்களை தேடும் பணியில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிலாபம் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மாணவ ஜோடிகள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய ஒரு மாணவியின் பெற்றோர் இச்சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்டுள்ளனர் எனினும் ஏனைய பெற்றோர்கள் இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
மாணவர்களை சிலாப நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு உத்தரவாத பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு மாணவி இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் நேற்று குறித்த பரிசோதனை மாணவிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை சிலாபம் பொலிஸ் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரி மேற்கொண்டுள்ளார்