பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம் கைகலப்பில்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூடஆகாத நிலையில் பெரிய கலவரமே வீட்டுக்குள் நடந்துள்ளது. Vikas Gupta, Akash Dadlani மற்றும் Priyank Sharma ஆகியோரிடையே நேற்று நடந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.

_13012

பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் Priyank Sharma உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சல்மான் கான் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கோபமாக இன்று நிகழ்ச்சியில் பேசினார். “கெட்ட வார்த்தை பேசுவது, மதம், பாலினம் பற்றி பேசுவது கூடாது என்பது பிக் பாஸ் காண்ட்ராக்டில் இருந்தும் இப்படி நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ளமுடியாது,” என மேலும் அவர் கூறினார்.

வேறு யாரெல்லாம் வெளியேறப்போகிறார்கள் என்பது நாளை தான் தெரியவரும்.