ஆசைப்பட்ட பெண்ணுடன் வாழ, மனைவிக்கு கணவர் அதிரடி வேலை!

பிரித்தானியாவில் ஆசைப்பட்ட பெண்ணுடன் வாழ வேண்டும் என்பதற்காக, மனைவியையே அவரது கணவர் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Capturekijuui

பிரபல வீராங்கனையான விக்டோரியா சில்லியர்ஸ் தனது கணவர் எமைல் சில்லியர்ஸ்-வுடன் சாலிஸ்பரி பிலைன் என்ற இடத்தில் விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சில்லியர்ஸ் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்தார்.கீழே குதித்த போது, திடீரென்று அவரது பாராசூட் செயல் இழந்தது, அவரது மாற்று பாராசூட்டும் செயல் இழந்ததால், அவர் சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வீராங்கனையின் கணவர் எமைல் சில்லியர்ஸ் தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் வாழ்வதற்காக பாராசூட்டில் சேதம் ஏற்படுத்தி மனைவியை கொல்ல முயற்சித்தது தெரியவந்துள்ளது.