வெடித்துச் சிதறிய பெட்ரோல் நிலையம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்!

கானாவில் பெட்ரோல் நிலையம் ஒன்று வெடித்துச் சிதறியதில் நூறடி உயரத்திற்கு நெருப்பு கோளம் எழுந்ததாக கூறப்படுகிறது.

கானாவின் Accray பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1433160855-4261

அதை நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பெட்ரோல் நிலையத்தில் உள்ள எரிவாயு தான் இந்த விபத்துக்கு காரணம என கூறப்படுகிறது.

குறித்த தகவல் வெளியானதும் 6 தீயணைப்பு எந்திரங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளது. கூடவே அவசர சிகிச்சை வாகனங்களும் விரைந்துள்ளன.

இதனிடையே அச்சத்தில் உறைந்த அப்பகுதியில் உள்ள மக்கள் நான்கு பக்கமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் அந்த வழியாக வந்த வாகனம் மோதி 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வாகனம் மோதியதில் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் கானா பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பெட்ரோல் நிலைய விபத்தில் சிக்கி எவரேனும் காயமுற்றனரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவு வரை அதன் வெப்பம் பரவியுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.