மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சன் மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் சவுந்தரநாயகன் பவிந்தரவர்சன் குடோ விளையாட்டில் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார்.
ஆனாலும், குறித்த மாணவன் அந்தப் போட்டிக்கு செல்வதற்கு வீட்டின் வறுமை காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரை மும்பைக்கு அனுப்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக பவிந்தரவர்சனின் தந்தை தெரிவிக்கின்றார்.
சர்வதேச குடோ போட்டியில் பங்குபற்றி சாதிக்கத் துடிக்கும் குறித்த மாணவனுக்கு துணைபுரிய வேண்டியது சமுதாயத்தின் கடமையே.