டர்பன், சூனிய செயல்களுக்காக, இந்திய பெண்ணின் தலையை வெட்டி, கொலை செய்ய தூண்டிய, தென் ஆப்ரிக்க மந்திரவாதிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தென் ஆப்ரிக்காவின், டர்பன் பகுதியைச் சேர்ந்த சிபோனாகலிசோ பிலி என்ற மந்திரவாதிக்கு சூனியம் தொடர்பான செயல்களுக்காக, ஒரு பெண்ணின் தலை தேவைப்பட்டது.
இதனையடுத்து நான்கு வாலிபர்களிடம், இந்திய பெண் ஒருவரின் தலையை கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
இதற்காக, இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளார்.
நான்கு வாலிபர்களும், டர்பனைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி பெண், தேஸ்ரீ முருகனை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
இதன்பின், இவரது தலையை வெட்டி, மந்திரவாதியிடம் கொடுத்துள்ளனர்.இந்த கொலை தொடர்பாக, பொலீசார் விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்படி, குமாலோ என்பவனை பிடித்து விசாரித்த போது, உண்மை தெரிய வந்தது.இதையடுத்து, மந்திரவாதி, பிலி மற்றும் நான்கு பேரையும், பொலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, டர்பன் கோர்ட்டில் இடம்பெற்ற நிலையில், இந்திய பெண்ணை கொலை செய்ததற்காக, பணம் கொடுத்த மந்திரவாதி, பீலிக்கும், கொலை செய்த, குமாலோ என்பவனுக்கும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.