கடந்த மே மாதம் இடம்பெற்ற வெள்ளத்தின் காரணமாக வீட்டை இழந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
தந்தையின் பாதுகாப்பை இழந்த தெவ்மின் தினேத்ரா என்ற சிறுமிக்கே தஹாம் இந்த வீட்டை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
இரத்தினபுரி அயகம, பண்டுகதே தோட்டத்தை சேர்ந்த இந்த சிறுமி வகுப்பில் முதலாம் இடத்தை பெற்ற திறமையான ஒருவராகும். அடுத்த வருடம் அவர் புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ளார்.
இந்த செய்தியை ஊடகங்களில் அவதானித்த ஜனாதிபதியின் மகன் அந்த சிறுமிக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அதற்கமைய அனைத்து வசதிகளை கொண்ட வீடு ஒன்றை 2 மாதங்களில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை தஹாம் நேற்றைய தினம் சிறுமியிடம் ஒப்படைத்துள்ளார்.
வீட்டிற்கு அவசியமான அனைத்து பொருட்களையும் அவர் பெற்று கொடுத்துள்ளார். கொடுத்த வாக்குறுதியை எதிர்பார்த்த திகதிக்கு முன்னரே நிறைவேற்றிய தஹாம் சிறிசேனவை அந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.