இறந்த சடலங்களுடன் தனிமையில் வாழ்ந்த நபர், கைது!

இறந்த சடலங்களுடன் வாழ்ந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (15)

அமெரிக்காவில் இறந்த தாய் மற்றும் சகோதரரின் சடலங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த வினோத மனிதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வொய்ட் பியர் லேக் பகுதியை சேர்ந்த ராபர்ட் ஜேம்ஸ் குயுப்லர் என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து ரொபர்ட் ஜேம்ஸின் வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இறந்த சடலங்களின் ஒன்று குறித்த நபரின் தாயார், மற்றும் அவரது சகோதரர் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தனது தாய் மற்றும் சகோதரனை பிரிந்து வாழ மனம் இல்லாததால் தான் அவர்கள் இறந்த பின்பும் அவரது உடல்களுடன் தனிமையில் வாழ்ந்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.