தொடரி படத்தில் நடிகர் தனுஷ் ஓடும் ரயிலில் சில சாகசம் செய்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது VFX என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அந்த காட்சிகள் படத்தில் தோன்றும் பொழுது கரணம் தப்பினால் மரணம் என்ற அடிப்படையில்தான் காட்டியிருப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு செயலை யாராலும் செய்வது கடினம்.
ஆனால் வடமாநிலத்து பெண் ஒருவர் ஓடும் ரயிலின் இரு பெட்டிகள் ஒன்று சேரும் கம்பிற்கு நடுவில் அமர்ந்து மிக சாதாரணமாக பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன் கைக்குழந்தையுடன் அந்த அபாயகரமான பயணம், இன்னும் பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இவர் எதற்காக இப்படி பயணித்தார் என்பது தெரியவில்லை. அந்த வீடியோ பதிவு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.