இலங்கையின் எந்தவொரு வளமும் சர்வதேசத்திற்கு விற்கப்போவதில்லை, முன்னைய அரசாங்கம் வாங்கிய கடன்களை செலுத்தவே மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்தார்.
மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.