ஏறக்குறைய அரசியலுக்கு வருவதை நடிகர் கமலஹாசன் உறுதி செய்து விட்டார்.
இதனை தொடர்ந்து, கட்சி பெயர், கொடி, சின்னங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும்,
ஓரிரு மாதங்களில் அவற்றை வெளிப்படையாக அறிவித்து அரசியல் களத்தில் இறங்குவார் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து வரும் கமல், அரசியல் விஷயங்களில் அடிக்கடி கருத்து கூறிவந்த கமல் கடந்த சில நாட்களாக பரபரப்பூட்டும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது, காய்ச்சல் காரணமாக அவதிப்படும் நடிகர் கமல்ஹாசனின் அடுத்த இரு நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரசிகர்கள் உடனான சந்திப்பிற்கு பிறகு தொண்டை வலியுடன், காய்ச்சல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்த தாக்கத்தால் பல நாட்களாகவே அவதிப்பட்டு வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.