கெக்கிராவ – வெருங்குளம் பகுதியில், கேரள கஞ்சா போதைப் பொருளுடன் தாய் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட தாய் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி என்றும் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கு பொதியிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.