அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம், சிறிலங்காவில்.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம் சிறிலங்காவில் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

images (2)

சிறிலங்காவில் இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்களால், பல ஆண்டுகளாக சிறிலங்கா தொடர்பான மனித உரிமை விவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்த நிலையிலேயே, உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகளின் பிராந்தியப் பணியகம் சிறிலங்காவின் அமைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் தெற்காசிய குழு கொழும்பில் தமது பிராந்தியப் பணியகத்தை அமைக்கவுள்ளதாக அறியப்படுகிறது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.