சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்ற படத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களாம். இந்த டீமில் இருந்து நடிகை மட்டும் கழன்று விட்டாராம்.
முந்தைய படத்தின் தொடர்ச்சி போலத்தான் தயாராகிறதாம் இந்தப் படம். அந்த காதல் ஜோடி ஒரு பங்களாவில் தங்குவதும் அதில் பேய் இருப்பதும்தான் கதையாம். எனவே அந்த நடிகையையே மீண்டும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால் முந்தைய படத்துக்கு கதை சொன்னபோது அடல்ட் விஷயங்களையெல்லாம் மறைத்து விட்டாராம். அதுபோல், இந்த படத்திலும் நடந்துவிடும் என்று உஷாராகிவிட்டாராம் கல் நடிகை!