புதுச்சேரியில் மே 17 இயக்கம் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. சுதேசி ஆலை எதிரே நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜாகாவின் தமிழின விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மே 17 இயக்கம் நடத்தி வருகிறோம். இங்கு பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முதலில் காவல் துறை அனுமதி மறுத்ததார்க்கு காரணம் பாஜகவின் அழுத்தமும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடுமே காரணம் என கூறினார்.
அதன்பின் பொதுக்கூட்டத்தின் ஆரம்பகட்டத்தில் திருமுருகன் காந்தி, ஈழப்படுகொலை குறித்த கருத்துக்களையே பேசி வந்தார். அதன்பின் தமிழக மக்கள் குறித்து பேசுகையில், “நாம் தற்போது நடக்கும் அரசியல் உரிமை பற்றி பேசவில்லையானால் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை போன்ற மிக மோசமான நிகழ்வு தமிகத்திலும் நடக்கும். குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிற்கவைப்பதற்கான போராட்டத்தை என்று நீங்கள் நடத்துகிறீர்களோ அன்று தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்” என கூறினார்.