உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாள் அல்லது அதனை அண்டிய ஒரு நாளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பல கட்சிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.