செவ்வாய் கிரகத்தின் நிலவின் முதல் படம் நாசா வெளியீடு!

நாசா அனுப்பிய, ஒடிசி செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் நிலவான போபோசின் முதல் படத்தை அனுப்பியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக, ஒடிசி என்ற செயற்கைக்கோளை, அனுப்பியது.

செவ்வாய்  கிரகத்தின்  நிலவின்  முதல் படம் வெளியீடு

செவ்வாய் குறித்து ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒடிசி, செவ்வாய் கிரகத்தின் நிலவான, போபோஸ் குறித்த முழுமையான படங்களை முதல் முறையாக அனுப்பியுள்ளது.

இது, போபோசில் உள்ள தட்பவெப்ப நிலை குறித்து ஆராய்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்துக்கு வலுசேர்த்துள்ளது.