இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களின் போக்குவரத்தினை கண்காணிக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அனைத்து மோட்டார் வாகனங்களிலும் பொருத்தக்கூடிய புதிய இலத்திரனியல் சிப் ஒன்றை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய முறை எதிர்வரும் வருடம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அலைகள் (GPS) ஊடாக வாகனத்தின் அனைத்து இயக்கங்களினதும் தகவல்களை பெற்றுக் கொள்ள கூடிய சிப் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இந்த சிப்பில் வாகனத்தின் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ள நிலையில் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக இந்த சிப் பொருத்துவது கட்டாயமாகும்.
பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட பின்னர் தப்பி செல்லும் வாகனங்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு இதன் ஊடாக இலகுவாக முடியும் என திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.