அரசியலில் வாதவிவாதங்கள் சண்டைகள் கடும் தொனியான பேச்சுக்கள் எல்லாம் நிகழும். இது பாராளுமன்றத்தின் உள்ளும் அமைச்சரவையிலும கட்சிக் கூட்டங்களிலும் நடப்பதுண்டு. அவை புதிதான விடயமல்ல.
அவ்வாறான நிலையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீம் ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் நடைபெற்றிருந்தது.
அமைச்சரவையில் நடந்த இந்தவிடயம் தற்போது வெளியில் கசிந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது ஹக்கீம், ‘அமைச்சரவையில் நடைபெறும் விடயங்களை நான் வெளியில் கூறுவதில்லை. அந்த அளவிற்கு கேவலமானவன் நான் இல்லை.
நான் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சில விடயங்களை சரியாகவே கையாண்டு வருகின்றேன். குறிப்பாக அமைச்சரவையில் நடைபெறும் விடயங்களை நான் வெளியில் பேசுவதில்லை.
ஆனால் யாராவது சம்பவத்தினை அல்லது விடயத்தினை கூறி இவ்வாறு நடந்ததா என்றால் ஆம் அல்லது இல்லை என்றே பதிலளிப்பேன். ஆகவே அமைச்சரவை விடங்களை முன்கூட்டியே வெளியில் கசிய விடுபவர்கள் தமது அரசியல் இலாபத்தினை மையப்படுத்தியே செயற்படுகின்றனர் என மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.