ஒருவழியாக விக்ரம் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அறிமுகமாக இருக்கிறார் விக்ரம் மகன் துருவ்.
ஹீரோவும் தயாரிப்பாளரும் மட்டும்தான் முடிவாகி இருக்கிறார்கள். இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட பிற ஆட்கள் முடிவாகவில்லை.
விக்ரமுக்கு இந்த படத்தை ஒரு பெரிய இயக்குநர் தான் இயக்க வேண்டும் என்று ஆசையாம். ரீமேக் செய்ய எந்த பெரிய இயக்குநர் முன்வருவார் என்று தேடிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். கமலின் இளைய மகள் அக்ஷராவை ஜோடியாக்க பேசுகிறார்களாம்.
அக்ஷரா மட்டுமல்லாமல் தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் ஷ்ரியா ஷர்மாவிடமும் பேசி வருகிறார்களாம்.
இவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர். இரண்டு வாரிசுகளில் ஒருவருடன்தான் டூயட் பாடப் போகிறாராம் விக்ரம் மகன்.