சகோதரிக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கிய வடகொரியத் தலைவர்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சகோதரிக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

CapturesF

இதன்பிரகாரம் வடகொரியாவின் உயர்மட்டத் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனத்தின் தலைவராக கிம் ஜோங் உன்னின் சகோதரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த கிம் ஜோங் இல்லின் இளைய புதல்வியான கிம் ஜோ ஜோங், ஆளும் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

30 வயதான கிம் ஜோ ஜோங், கட்சியின் மூத்த அதிகாரியாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார்.

வடகொரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கிம் ஜோ ஜோங்கை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

1948 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததில் இருந்து வடகொரியாவை கிம்மின் குடும்பத்தினர் ஆட்சி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.