ஆண் சிசுவின் உடல் முல்லைத்தீவு, கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்தில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இதையடுத்து இந்தக் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
முள்ளியவளைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே சிசுவின் உடல் மீட்கப்பட்டது. சூரிபுரம் மாதிரிக் கிராமத்தில் சம்பவம் நடந்தது.
சிசு ஒன்றின் உடலை இருவர் புதைப்பதை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்குத்தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் அங்கு விரைந்தனர்.
சிசுவைப் பெற்றெடுத்தார் என்ற சந்தேகத்தில் 35 வயதுடைய பெண் ஒருவரும்,அவருக்கு ஒத்தாசை புரிந்தார் என்ற சந்தேகத்தில் பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.