ஸ்ரீலங்காவில் உள்ள மலையாள வம்சத்தினரின் பிள்ளைகளுக்கு மலையாள மொழி வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கான கற்பித்தல் வகுப்புக்கள் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வகுப்புக்கள் நேற்றுக்காலை ஸ்ரீலங்கா சனாதிபதியின் இணைப்பாளர் எம்.கே.ராகுலனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஸ்ரீநாரயணகுரு மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த வகுப்பில் மலையாள வம்சாவழிப் பிள்ளைகள் சிலர் கலந்துகொண்டனர்.