தற்போது மெர்சல் படத்தில் எம்ஜிஆரின் ரசிகராக நடித்திருக்கிறார் விஜய். அதாவது இந்த படத்தில் அப்பா -இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய். இதில் அப்பாவாக நடித்துள்ள விஜய், எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறாராம்.
அதனால் சில காட்சிகளில் எம்ஜிஆரின் பாடல்களை பாடியபடி என்ட்ரி கொடுக்கிறாராம் விஜய். அதோடு எம்ஜிஆர் பேசிய சில முக்கிய வசனங்களையும் சொல்லி மேற்கோள் காட்டுகிறாராம். மேலும், இந்த படம் தெலுங்கில் அதிரின்டி என்ற பெயரில் வெளியாவதால், தெலுங்கு பதிப்பில் என்டிஆரின் ரசிகராக நடித்துள்ளாராம் விஜய். ஆக, தமிழில் எம்ஜிஆர் ரசிகர், தெலுங்கில் என்டிஆர் ரசிகர் என ஒரே படத்தில் இரண்டு மெகா நடிகர்களின் ரசிகராகியிருக்கிறார் விஜய். மேலும் என்று மெர்சல் படத்தின் டீஸர் வெளிவந்து இணையத்தை கலக்கியுள்ளது.