வயோதிபத் தாயை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசியெறிந்த மகன்! யாழில் பயங்கரம்

யாழ்ப்பாணம் ராசாவின் தோட்டப்பகுதியில் ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

வயது முதிர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மன நிலை பாதிக்கப்பட்ட அவருடைய மகனே குறித்த வயோதிப தாயை அடித்து கொலை செய்யதாக தெரியவருகின்றது.

குறித்த  சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாதாவது…..

இன்று இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்சார இணைப்பு வேலைக்கு மின்சார சபையினர்  சென்றுள்ளனர்.

அப்போது அந்த வீட்டின் கிணற்றில் அந்த வீட்டில் வசிக்கும் 35 வயதுடைய சுதர்சன் என்பவர் இருந்துள்ளார். ஏன் இங்கு இருக்கிறீர்கள் என கேட்ட போது அம்மாவை அடித்து கொலை பண்ணி கிணற்றுக்குள் வீசி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

கிணற்றுக்குள் பார்த்த போது அங்கு சடலம் இருப்பதை மின்சாரசபையினர் பார்த்துள்ளனா்.குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வருகிறது.

இச்சம்பவத்தில் இராசாவின் தோட்டதைச் சேர்ந்த  70  வயதான  செ.ரத்னாம்பிகை இறந்துள்ளார்.மன நிலை பாதிக்கப்பட்ட குறித்தநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன