கள்ளக் காதலனின் விநோத பழிவாங்கல் – இலங்கையில்

பெண்ணொருவரின் நிர்வாணப் படத்தை அச்சிட்டு அதனை விநியோகித்த காரணத்திற்காக ஒருவரை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

artworks-000158773107-ej5z25-t500x500

சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது சம்பந்தப்பட்ட பெண்ணின் நிர்வாணப்படம் அவரிடம் இருந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் இந்த பெண் களனி வராகொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவரும் பின்னர் மினுவங்கொடை பிரதேசத்தில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு 21 வயதான மகனும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் இருவரும் தகராறில் பிரிந்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தினால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பகிரங்கப்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.