‘காலி கலந்துரையாடல்-2017′ கொழும்பில் தொடங்கியது

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017′ இன்று  கொழும்பில் உள்ள கோல்பேஸ் விடுதியில் ஆரம்பமானது.

இன்று காலை ஆரம்பித்த 8 ஆவது ‘காலி கலந்துரையாடல்-2017′ நாளையும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பிரதம விருந்தினராகப் பங்கேற்று ஆரம்பித்து வைத்தார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

Galle-Dialogue-2017 (1)

Galle-Dialogue-2017 (2)

Galle-Dialogue-2017 (3)

Galle-Dialogue-2017 (4)

இம்முறை காலி கலந்துரையாடலில் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 51 நாடுகள் மற்றும் 12 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகள், உள்நாட்டு வெளிநாட்டு படை அதிகாரிகள் உள்ளிட்ட 100இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.