இன்றைய ராசிபலன் (10/10/2017)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

  • கடகம்

    கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

  • சிம்மம்

    சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

  • துலாம்

    துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

  • மகரம்

    மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.

  • கும்பம்

    கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.

  • மீனம்

    மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.