கமல் ஹாசனின் அண்ணன், இழிவாக பேச காரணம் இதுவா..?

கமல்ஹாசன் அரசியல் கட்சி துவக்குவதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். கமலுடன் இணைந்து அரசியல் செய்யலாமா, தனிக்கட்சி தொடங்கலாமா என்று ரஜினி யோசித்து வருகிறார். இந்த நிலையில் “ரஜினி, கமல் இருவருமே அரசியலில் ஜெயிக்க முடியாது. பத்து சதவிகித ஓட்டுகள் தான் வாங்க முடியும்” என்கிறார் கமலின் அண்ணன் சாருஹாசன். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருக்கிறார்.

கமல் ஹாசனின் அண்ணன் அவரை பற்றி இழிவாக பேச காரணம் இதுவா..?

மேலும் கமல்ஹாசன், அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். திறமையானவர், உழைப்பாளி. ஆனால் மக்கள் அவரை ஏற்பார்களா? என்பது சந்தேகம். ரஜினிகாந்தை அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கும் மக்கள் கமல்ஹாசனை பார்த்து அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள் என்று தான் கேட்கிறார்கள். எனவே கமல்ஹாசனுக்கு முதல் அமைச்சராகும் வாய்ப்பு இல்லை.

கமல் ஹாசனின் அண்ணன் அவரை பற்றி இழிவாக பேச காரணம் இதுவா..?

தமிழ் நாட்டில் சாதி அடிப்படையில் தான் அரசியல் இருக்கிறது. எனவே கமல்ஹாசனுக்கு அதுவும் சாதகமாக இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமே அரசியலில் பெரிய வாய்ப்பு இல்லை. இருவருக்கும் 10 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். மக்கள் சினிமாவை பார்த்து யாருக்கும் ஓட்டுபோடுவது இல்லை. ரஜினிகாந்த் மீது மக்களுக்கு கவர்ச்சி மயக்கம் உள்ளது. கமல்ஹாசனுக்கு அது இல்லை. நல்ல நடிகராக மட்டுமே அவரை பார்க்கிறார்கள் என்று சாருஹாசன் கூறியுள்ளார்.