கடந்த ஆறாம் திகதி தச்சன் தோப்பு பகுதியில் முதியவர் ஒருவரை தாக்கி காயபடுத்திவிட்டு 19000 ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை பறித்துக்கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை அவதானித்த பாதிக்கப்பட்ட முதியவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
இந் முறைப்பாட்டின் படி சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் பதியப்பட்ட மோட்டார் சைக்கிள் என அடையாளம் காணப்பட்டது.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 10 வருடங்களுக்கு முன்னர் விற்பனைசெய்யப்பட்ட சைக்கிள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இன்றுவரை 12பேருக்கு மேல் சைக்கிள் கைமாற்றமடைந்து இறுதியில் பலத்த சிரமத்தின் மத்தியில் புத்தூர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் குறித்த வாகனம் இருந்ததை கண்டுபிடித்த சாவகச்சேரி பொலிசார் அத்தோடு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பருத்தித்துறை, வல்வெட்டிதுறை ,கொடிகாமம் கோப்பாய், மல்லாகம் வவுனியா பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இன்று மாலை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் விக்கிரமசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ஆர் பிரதீப் தலைமையிலான செனவிரத்தின,கோடித்துவக்கு, அசோக, றட்நாயக்கா,திஸ்ஸநாயக்கா, பாறீட், அனுர, ஆகியோர் கொண்ட குழுவினரே இக்கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.