இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் உள்ள மேசை லாட்சியில் இருந்து உடலுறவுக்குப் பயன்படுத்தப்படும் ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை நேரம் முடிவடைந்ததும் வகுப்பறையை சுத்தம் செய்வதற்காகச் சென்ற ஊழியர், மாணவி ஒருவரின் மேசை லாட்சியில் இருந்து ஆணுறையை கண்டெடுத்து அதிபரிடம் கைளித்துள்ளார்.
இது குறித்து அடுத்தநாள் காலை பாடசாலைக்குச் சென்ற, குறித்த மேசைக்குரிய மாணவியை அழைத்து வகுப்பு ஆசிரியர், விசாரணை நடத்தியுள்ளார். ஆனால் மாணவி மறுத்துள்ளார்.
வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டதாக மாணவி தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். குறித்த மேசைக்குரிய மாணவி படிப்பில் மிகவும் திறமையானவர் என கூறிய ஆசிரியர் ஒருவர், பொறாமையின் காரணமாக சில மாணவிகள் இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது. அதேவேளை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகத்தில் பாடசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.