உள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை தொடர்பாக, மூத்த தலைமை அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

vote

இதற்கமைய மூத்த தலைமை அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு, நாடளாவிய ரீதியில் 3 நாட்கள் சிறப்பு பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுக்கும் வரும் டிசெம்பர் மாதம், பயிற்சி அளிக்கவும், தேர்தல் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டால், அவற்றின் பிரதிநிதிகளுக்கும், புதிய தேர்தல் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கவும், தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.