போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

போர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வுகாண சிறிலங்கா இராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகம் ஒன்று விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

major1

“வன்னி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற அடிப்படையில், சண்டையிடும் படைப்பிரிவுகள் தண்டிக்கப்பட்டுள்ளன.

படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு திரும்பத் திரும்ப அமெரிக்க நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.

59 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு அவுஸ்ரேலியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.