நேபாளத்தில், முதன்முறையாக, திருநங்கை ஒருவர், திருமணம் செய்து, அதற்கு அங்கீகாரமும் பெற்றுள்ளார்.
குறித்த திருநங்கையின் திருமணத்திற்கு, நேபாள அரசு, திருமண சான்றிதழ் வழங்கி, சட்டபூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது.
40 வயதான மோனிகா ஷாகி நாத், 40, என்ற திருநங்கை, 22 வயதுடைய ரமேஷ் யோகி, என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு, மணமகன் யோகியின் உறவினர்கள், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் சம்மதித்தனர்.
மனோஜ் என்ற பெயரில், சிறு வயதில் ஆணாகவே இருந்து பின்னர் பெண்ணாக மாறிய குறித்த திருநங்கையான மோனிகா ஷாகி வாலிப வயதில், பெண்களின் ஆடையை அணிந்ததால், அவமானங்களை சந்தித்து; வீட்டை விட்டு வெளியேறினார்.
பாஸ்போர்ட்டுக்காக, 2015ல், விண்ணப்பித்த அவருக்கு அப்போது, நேபாள அரசு, மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, பாஸ்போர்ட் வழங்கியது.
தனக்கு திருமணம் நடந்து, ஒருவருக்கு மனைவி ஆவேன் என, கனவிலும் நினைக்கவில்லை என மோனிக்கா கூறியுள்ளார்.
இதேவேளை மோனிகாவின் கணவர், யோகிக்கு, ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில், திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்க, அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடையாள அட்டை மற்றும், பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், அவர்கள் திருமணம் செய்வது தொடர்பாக, இங்கு சட்டங்கள் எதுவும் இல்லை. தற்போது திருமணத்திற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.