வருத்தம் தெரிவித்த டவ் நிறுவனம்!

கடந்த வெள்ளிக்கிழமை டவ் சோப்பின் சார்பாக விளம்பரம் ஒன்று முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டது. ஜிஃப் வடிவிலான அந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. ஒரு கறுத்த நிறத்திலான பெண், அதே நிறத்திலான உடையை களையும் போது, அங்கு அடுத்ததாக ஒரு வெள்ளை நிறப்பெண், வெள்ளை நிறச் சட்டையை அணிந்திருக்கும் பெண் திரையில் தோன்றுகிறார். இதுதான் அந்த விளம்பரம்.

dove_15173

நிறத்தினை முன்னிலைப்படுத்தாமல் ‘இயற்கை அழகு’ என்று பெரிய அளவிலான விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடத்திய, மற்ற சோப் நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு, விளம்பரங்களில் மாநிறப்பெண்களை நடிக்க வைக்கும் டவ் நிறுவனத்திடமிருந்து இதுபோலொரு விளம்பரத்தை யாரும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்தான். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த விளம்பரம் சனிக்கிழமை நீக்கப்பட்டது. பின் இணையதளத்தில் டவ்வின் இந்தச் செயலைக் கண்டித்து நடந்த மிகப்பெரிய அளவிலான பிரசாரங்களுக்கு நடுவே, தற்போது ‘தங்களுடைய விளம்பரம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறிவிட்டதாக’ கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறது டவ் நிறுவனம்.