பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இந்த வருடம் தன் 75 வது பிறந்த நாளையும், வரும் தீபாவளியையும் கொண்டாடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இதன் காரணம் அவரின் பயணம் என சொல்லப்பட்டது.
வரும் அக்டோபர் 11 அவருக்கு 75 வது பிறந்த நாள். ட்விட்டரில் மட்டும் இவரை 30 மில்லியன் பேர் பின்பற்றி வருவதோடு இதில் இல்லாத பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வெளியிலும் இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. இவ்வருடம் மே மாதம் இவரின் மருமகளான ஐஸ்வர்யா ராயின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதன் சோகம் குடும்பத்தினர் அனைவரையும் பாதித்தது.