ஒரே நாளில் விருந்து கொடுக்கும் விக்ரம் – சிவகார்த்திகேயன்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். இதன் டீசரை வரும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி விருந்தாக வெளியிடுகின்றனர்.
1499155212-6015
மேலும் விஜய்யின் ‘மெர்சல்’ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் காண்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை நவம்பரில் வெளியிட இருக்கிறார்கள். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 22ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாம். இதே நாளில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.