வக்கீல் மூக்கை உடைத்த சந்தானம் தலைமறைவு.
சென்னை: நடிகர் சந்தானத்துடன் மோதலில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் மீது 2 பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சந்தானம் தலைமறைவாகிவிட்டார்.
சென்னை விருகம்பாக்கத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம், நடிகர் சந்தானம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. இதில் காயம் அடைந்த சண்முகசுந்தரம், அவரின் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், சந்தானம், அவரின் உதவியாளர் ரமேஷ் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சண்முகசுந்தரம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரத்தின் வழக்கறிஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த சந்தானம் மருத்துவமனையில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். சந்தானத்தின் உதவியாளர் ரமேஷையும் போலீசார் தேடி வருகிறார்கள்.