புனேவில் ஒருவர் தன் செருப்பைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்க, போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கேத் தேசில் பகுதியில் ரக்ஷேவாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விஷால் கலேகர். இவர் அக்டோபர் 3ஆம் தேதி புனே புறநகர் போலீசாரிடம் புகார் அளித்த புகாரில், தன்னுடைய வீட்டில் இருந்த செருப்பு காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை ஏற்று போலீசாரும் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். “விஷால் தன்னுடைய ரூ.425 மதிப்புடைய செருப்பு காணாமல் போனது பற்றி வழக்கு பதிந்தே ஆக வேண்டும் என்று உறுதியாகக் கூறியதால் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று அந்த காவல்நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், புகார் கொடுத்த உடனேயே வழக்கு பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் விக்னேஷ்..!