ஒரே நாளில் பின்வாங்கிய சீனா..! நிர்மலா சீதாராமன் எடுத்த அதிரடி தெரியுமா..?

எல்லையில் சீன ராணுவத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து எல்லை பிரச்சினையில் அமைதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

 

sitha_2049761f

கடந்த சில மாதங்கள் முன்பு இந்தியா-பூட்டான்-சீனா எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இந்திய ராணுவத்தை குவித்ததால், சாலை அமைக்கும் பணி நிறுத்திய சீனா, ராணுவத்தை பெருமளவு அதிகரித்தது.

இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் போர் பதற்றம் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் சிக்கிம் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய வீரர்களை சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து சீன வீரர்களையும் சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன், அவர்களுக்கு ‘நமஸ்தே’ என்று கூறி அதன் விளக்கத்தை கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீன வீரர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வு.

1890-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சிக்கிம் பகுதி பிரிக்கப்பட்டது. அதனை இந்தியா ஏற்க வேண்டும். இதற்கு சாட்சியாக இருப்பது, நாதுலா பகுதி.

ஏற்கனவே இரு நாட்டுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி அமைதியாக தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்றார்.