தமிழீழ காவல்துறையின் இலக்கத்தகடு கண்டுபிடிப்பு; மக்கள் பெருமிதம்!

தமிழீழ காவல்துறை கட்டமைப்பின் பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவருடைய அடையாள இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ காவல்துறையின் இலக்கத்தகடு கண்டுபிடிப்பு; மக்கள் பெருமிதம்!

மூதாட்டி ஒருவர் குறித்த பகுதியில் விறகு எடுக்கச் சென்றபோது அவரால் இந்த இலக்கத்தகடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

’பெ.கா 171 என குறித்த இலக்கத் தகடு அமைந்துள்ளது. இதன் விரிவாக்கம் பெண் காவல்துறை என மக்களால் பெருமிதத்தோடு கூறப்பட்டுள்ளது.

தமிழீழ காவல்துறையின் இலக்கத்தகடு கண்டுபிடிப்பு; மக்கள் பெருமிதம்!

இதேவேளை விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின்கீழ் உள்ள பகுதிகள் எங்கும் தமிழீழ காவல்துறையின் பணிமனைகள் அமைந்திருந்து மக்களுக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ காவல்துறையின் இலக்கத்தகடு கண்டுபிடிப்பு; மக்கள் பெருமிதம்!